கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
கொழும்பு (Colombo) நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையை குறைக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் மரங்களின் தண்டுகளுக்கு அருகில் இன்டர்லாக்கிங் (Interlocking ) கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என தாவர நிபுணர் சுனில் கமகே (sunil gamage) சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய செடிகள் நடுகை
இதன் காரணமாக கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளில் உள்ள கற்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் இந்திக தெரிவித்தார்.
ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா (George R. De Silva Mawatha) மாவத்தையின் இரு பாதைகளுக்கு நடுவில் உள்ள இன்டர்லாக்கிங் (Interlocking) கற்களை மாற்றி சிறிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கற்களை குறைக்க நடவடிக்கை
இது நகரின் வெப்பநிலையை சிறிது குறைக்கும் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கொழும்பு நகரில் உள்ள செடிகளின் தண்டுக்கு அருகாமையில் உள்ள Interlocking கற்களை அகற்றுவதற்கு கொழும்பு நகர சபை தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |