சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு முன் பதற்றம்
சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு (Presidential Secretariat of Sri Lanka) முன்பாக இன்று (15) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரத்தை மீள வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இலஞ்சம், ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடவடிக்கை
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதையடுத்தே, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் (Kapila Munasinghe) மகஜரொன்றை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |