தெல்லிப்பழையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு
யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (25) மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது சிறுவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து மாவீரரின் தந்தை ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்ட நிலையில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மலர் வணக்கம் செலுத்தினர்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |