படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல்
சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (18.02.2024) மாலை 03.30 மணியளவில் ஆரம்பமாகியது.
சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (1994.02.18) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நினைவேந்தல்
மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வின் பொதுச் சுடரினை கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஏற்றிவைத்துள்ளார்.
உதைபந்தாட்ட போட்டிகள்
அத்துடன் உயிரிழந்த பத்து கடற்றொழிலாளர்களின் உறவுகள் ஈகைச்சுடரினை ஏற்றி இறந்த தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனுடன் இறுதி நிகழ்வாக நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |