யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் வார 1ஆம் நாள் நினைவேந்தல் (படங்கள்)
                                    
                    Sri Lankan Tamils
                
                                                
                    Jaffna
                
                                                
                    University of Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நினைவுத்தூபி
இதேவேளை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 


 
                                        
                                                                                                                         
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        