கொள்ளுபிட்டி விபத்து சம்பவம்: பாரிய மரங்களை அடியோடு அகற்றும் பணிகள் ஆரம்பம்
Sri Lanka Police
Colombo
Accident
By pavan
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட வீதியின் இருமருங்குகளிலும் ஆபத்தான மரங்களை வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் அரச பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
அகற்றல் பணி ஆரம்பம்
இதனை தொடர்ந்து கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீதியின் இருமருங்குகளிலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப கொழும்பு நகர எல்லையில் 100 வருடகளுக்கு மேலான பழைய பெரிய மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதுடன், மரங்களும் அடியோடு அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்