நேரடி விமான சேவைகள் ஆரம்பம் - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள முக்கிய செய்தி
இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி, 30 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்திற்கு வாராந்திர விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (07) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்காக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 11.20 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவை சென்றடையும்.
இரு நகரங்களுக்கிடையேயான விமான சேவைக்கான நேரம் சுமார் 8 மணி நேரம் 25 நிமிடங்கள் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தொடர்புக்கு 011 777 19 79 என்ற எண்ணை அழைக்கவும், அல்லது www.srilankan.com ஐ பார்வையிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.