கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட மதுரைக்கான விமான சேவை ஆரம்பம்
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்ட மதுரை-இலங்கை இடையே யான விமான சேவை ஒன்றரை வருடத்துக்கு பின்னர், மீண்டும் ஆரம்பமாகியது.
இதன்படி தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பயணிக்க அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவலால் 2020 மார்ச் முதல் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதுரை-இலங்கை விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தளர்வுகளுடன் விமானப்போக்குவரத்து தொடங்கிய நிலையில் மதுரை- இலங்கைக்கு விமானம் இயக் கப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 38 பயணிகள் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையத்திலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் 76 பயணிகள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.