மட்டக்களப்பில் 1.5கோடி பெறுமதியான நகைகளுடன் மாயமான முகாமையாளர்! காவல்துறை விசாரணை ஆரம்பம்
மட்டக்களப்பில் இயங்கிவரும் தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில், அதன் முகாமையாளர் வாடிக்கையாளரின் தங்க நகை உட்பட 17 இலட்சம் ரூபா பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (24.04.2026) இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
17 இலட்சம் ரூபா
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், அங்கிருந்த கணக்காளரை அணுகி கடந்த வெள்ளிக்கிழமை (24.04.2026) காலை தங்க ஆபரணங்களை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த நகைகளை மீண்டும் சரிபார்ப்பதற்காக நிறுவனத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வாடிக்கையாளரின் நகைகளை பாதுகாப்புப் பெட்டியிலிருந்து எடுத்துத் தனது மேசையில் வைக்குமாறு கூறியுள்ளார்.

மேலும், கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து தனது வங்கி கணக்குக்கு இதுவரை பணம் வைப்பில் இடப்படவில்லை அதனை வைப்பில் இடுமாறு கோரி அந்த 17 இலட்சம் ரூபா பணத்தை தான் வைப்பில் இடுவதாக கணக்காளரிடம் இருந்து பணத்தை முகாமையாளர் எடுத்துக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து நகைகளை வாடிக்கையாளரிடம் காட்டிவிட்டு வருவதாக கூறி, ஒரு கோடியே 57 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் 17 இலட்சம் பணத்துடன் பிற்பகல் 2.30 மணியளவில் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
மாலை நேரமாகியும் அவர் பணிக்கு திரும்பாததால், அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது செயலிழப்பிலிருந்தமை தெரியவந்துள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவு
இந்நிலையில் இந்ததிருட்டு சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் கணக்காளர் நேற்று (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் திட்டமிட்டே நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளமை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்