முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

Donald Trump Middle East Iran-Israel War Iran Nuclear Sites Iran-US Conflict
By Dhilak Apr 27, 2026 07:33 AM GMT
Report

இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் புதிய முன்மொழிவு ஒன்றை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய திட்டத்தின்படி, சர்ச்சைக்குரிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மீதான தடையை நீக்கி, அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்த முன்மொழிவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

அமெரிக்காவின் பிரதான கோரிக்கை

அதன்படி, போர்நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க அல்லது போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு | Iran New Proposal To Us To Open Hormuz And End War

எவ்வாறாயினும், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான கோரிக்கையை ஏற்பது குறித்து ஈரானியத் தலைமைக்குள் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் அவசர ஆலோசனை

இந்த முன்மொழிவு குறித்து வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக எதனையும் உறுதிப்படுத்தாத போதும், அமெரிக்கா தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒப்பந்தங்களை மட்டுமே மேற்கொள்ளும் என அதன் ஊடகத் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு | Iran New Proposal To Us To Open Hormuz And End War

இதேவேளை, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் கடல்வழித் தடையைத் தொடரப் போவதாக ஜனாதிபதி ட்ரம்ப்பும் சமிஞ்சை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க ட்ரம்ப் தனது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி