நிறுத்தப்பட்ட எரிபொருள் விற்பனை: நிறுவனமொன்று எடுத்துள்ள முடிவு
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து குறித்த அவுஸ்திரேலிய நிறுவனம் இயங்கவில்லை என கூறப்படுகிறது.
எரிபொருள் விற்பனை
சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர். எம். பார்க்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் நாட்டில் செயற்பாடுகளை ஆரம்பத்திருந்தன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில்150 என 450 எரிபொருள் நிலையங்களை இயக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தற்போது நாட்டில் எரிபொருள் விற்பனையை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி வருவதுடன், அவுஸ்திரேலிய நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.
சிக்கல் சூழ்நிலை
குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின்படி, யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், ஆனால் இடைநடுவே அவர்கள் விற்பனை நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)