விபத்துக்களி்ல் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ஐந்து லட்சம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் போது விபத்துக்களின் உயிரிழக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இவ்வாறு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கபட்டதாக கூறப்படுகிறது.
செப்டெம்பர் 11ஆம் திகதி புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தமை மற்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தமை ஆகிய இரு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி ரயிலில் புகையிரத்தில் இருந்து இளைஞரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டதுடன், கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் இ.போ.ச பேருந்தில் மரம் ஒன்று விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.