அடாவடி பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலப்பரப்பு - சாணக்கியன் சாடல்
கெவிலியா மடுவ பிரதேசத்தில் அடாவடித்தனமான பிக்கு ஒருவர் விவசாயிகளின் காணியை அபகரித்து பயிர் செய்து வருவதுடன் அங்கு செல்லும் கால்நடைகளை சித்திரவதை செய்து விற்று வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17.12.2024) உரையாற்றும் போதே இந்த விடயத்தை இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதி மற்றும் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு பிரச்சனை இனங்களுக்கிடையில் முரண்பாடு வளரும் அளவிற்கு விரிவடைந்துள்ளதாக இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தனக்கு எதிராக சில மதத் தலைவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை செய்யதுடன் பொல்லால் அடித்து தனது முதுகெலும்பை உடைக்க போவதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |