ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக இலங்கை கிரிகெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கை!
ரொஷான் ரணசிங்க, உத்தேசிக்கப்பட்ட நோக்கங்களுக்காக இலங்கை கிரிகெட் சபை ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தியதாக சரியான முறையில் தெளிவுபடுத்தவில்லை என்பதால் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய விளையாட்டுத்துறைக்கு பல்வேறு விளையாட்டுகளின் வளர்ச்சிக்காக இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இலங்கை கிரிக்கெட் சபை முறைப்பாடு செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமை
இந்த நடவடிக்கையானது ரணசிங்கவினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும், தகவல் அறியும் உரிமையின் (RTI) விண்ணப்பத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைத்த பதிலுக்கும் இடையில் காணக்கூடிய வேறுபாடுகளை அடுத்து, செய்யப்பட்ட செலவினங்களின் பிரத்தியேகங்களை கோடிட்டுக் காட்டுகிறது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்