கொரோனா மரணம் மற்றும் தொற்று தொடர்பான முழுமையான விபரம் வெளிவந்தது
covid
srilanka
infection
death
By Sumithiran
இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,949ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 1,282 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 634,333 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 310 பேர் பூரணமாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,639 ஆக அதிகரித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்