267 அரச ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு திட்டம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு வர்த்தக உரக்கம்பனி ஆகியவை இணைந்ததைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 267 அரச ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரண்டு அரச நிறுவனங்களின் இணைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 267 ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
கட்டாய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஓய்வூதிய பணம்
அதன்படி, இரண்டு உர நிறுவனங்களின் நிதியில் இருந்து 844 மில்லியன் ரூபாவை செலவிட அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அதிகப்படியான ஊழியர்களின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு நிதி செலவிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |