ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க அமைச்சர் விதிக்கும் நிபந்தனை
சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட வேண்டுமானால், அவர் செய்த தவறுக்காக அனைத்து நீதிபதிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிறைத்துறை இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார், அவரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல நடிகர்கள், நடிகைகள், வழக்கறிஞர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்க தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டால், ஜனாதிபதியின் கவனத்தை அவரது மன்னிப்பிற்கு ஈர்க்கலாம் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தற்போது அங்குனகொலபெலஸ்ஸா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.