மக்கள் ஆணையின்றி அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - கர்தினால் காட்டம்!
சிறிலங்காவில் உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அநீதியான ஆட்சி

பேராயர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாட்டின் தேவையை முதன்மையாக கருதாத அரசியல்வாதிகளால் நாட்டை மேம்படுத்தவும் முன்னோக்கி கொண்டு செல்லவும் முடியாது.
நீதியை அநீதியாக மாற்றவும், ஆட்சியை சர்வாதிகாரமாக்கவும், சட்டத்தை மாற்றி சமூகத்தை வழிநடத்தவும் இன்றைய தலைவர்கள் கை கோர்த்து செயல்படுகின்றனர்.
இவ்வாறான நபர்களை வெளியேற்றுவதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.
சிறிலங்காவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி இல்லையென கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்திருக்கும் பின்னணியில் தேர்தலை நடத்த முடியும்.
மக்கள் ஆணையின்றி பொறுப்பேற்ற ஒருவர் தமது அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் மக்களை அடக்குவதற்காக பல சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் சர்வதிகாரத்தை நிலைநாட்ட யாரும் முயற்சிக்க கூடாது." என குறிப்பிட்டார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்