சட்டத்திற்கு பயந்தொழிந்த தேசபந்து: சிஐடியின் வலையில் மனைவி - மகன்!
நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
ஹோகந்தரவில் ஒரு வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, தலைமறைவாகியுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடி குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விசாரணை
அதன்படி, அவரின் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதுடன், அங்கேயும் அவர் இருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (13) வீட்டைத் தொடர்ந்து சோதனை செய்த அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் மகன் மற்றும் மனைவியிடம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்