அமெரிக்காவை புரட்டியெடுத்த பாரிய அனர்த்தம்: டசின் கணக்கானோர் பலி!
அமெரிக்காவின் (US) தென்கிழக்கு பகுதியில் சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், கொடிய சூறாவளி காரணமாக மிசோரி மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாகன விபத்து
சூறாவளியால் கன்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலால் 55 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சூறாவளி தொடர்ந்து வீசி வந்ததால், மிசிசிப்பி, ஆர்கன்சாஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய மாநிலங்களும் அவசரகால நிலையை அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் துண்டிப்பு
அத்தோடு, மிசோரி உட்பட ஐந்து மாநிலங்களில் 170,000 வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பேரழிவு தரும் சூறாவளிகள் மத்திய மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட காட்டுத்தீயை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்