40 வயது மனைவியை கொன்ற 25 வயது கணவரின் பகீர் வாக்குமூலம்

Attempted Murder Sri Lanka Police Investigation Crime
By Jaso May 06, 2023 06:49 PM GMT
Report

கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த தனது 45 வயதான மனைவியை எதற்காக கொன்றேன் என்ற விபரத்தை 25 வயதே ஆன கணவன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி மனைவியின் 3 கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக மனைவியை கணவன் கொன்றது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது நண்பரைப் பயன்படுத்தி மனைவியை,கணவன் வாகனத்தால் மோதி கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியோரம் நின்ற பெண் மீது மோதிய வாகனம்

40 வயது மனைவியை கொன்ற 25 வயது கணவரின் பகீர் வாக்குமூலம் | Confession Of The Husband Who Killed His Wife

பிடிகல மானம்பிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஜீப் வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் ஜீப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நிரோஷா உதயங்கனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் பின்னணி

40 வயது மனைவியை கொன்ற 25 வயது கணவரின் பகீர் வாக்குமூலம் | Confession Of The Husband Who Killed His Wife

உயிரிழந்த பெண்ணின் 25 வயதுடைய கணவர் மோட்டார் சைக்கிளில் விபத்து நடந்த இடத்திற்கு மனைவியுடன் வந்து, அந்த இடத்தில் அவரை இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பிறகே அங்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பிடிகல காவல்துறையினர் முதலில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை கண்டுபிடித்துள்ளனர். விசாரணைகளின் போது, ​​குறித்த ஜீப் வண்டியை உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் இறந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதன்போது, இறந்த பெண்ணின் கணவரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

40 வயது மனைவியை கொன்ற 25 வயது கணவரின் பகீர் வாக்குமூலம் | Confession Of The Husband Who Killed His Wife

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வௌிநாட்டில் இருந்த போது உழைத்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் அவரின் மூன்று காப்புறுதிகளின் மூன்று கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்த கொலையை திட்டமிட்டதாக பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை குறித்த ஜீப் வண்டியை செலுத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026