ஊரடங்கை நீக்கி நாட்டைத் திறப்பது உறுதி - இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
Curfew
Shavendra Silva
People
SriLanka
By Chanakyan
சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அடுத்த வாரம் நாட்டைத் திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளர்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கொவிட் தடுப்புக்கான செயலணியில் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை எவ்வாறு திறப்பது என்பது குறித்த பரிந்துரை இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
குறித்த பரிந்துரைகளின் படி நாட்டைத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
நாடு திறந்தாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருகடகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.