யாழில் தேர்தல் பிரசார கூட்டத்தில் குழப்பம் : ஒருவர் அதிரடி கைது
யாழில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்த கோரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கொட்டடி பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
பிரச்சார கூட்டம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தினை நிறுத்தி விட்டு , தேசிய மக்கள் சக்தியினரை வெளியேற கோரி , கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரச்சார கூட்டத்தில் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
