முந்தைய குழப்ப நிலை ஏற்படலாம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் இலங்கை மீண்டும் அதன் முந்தைய குழப்ப நிலைக்குத் திரும்பும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக அனுராதபுரம் மற்றும் தென்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் வேகமாக அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்தார்.
எனவே, வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளைத் தொடருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் அப்படியே இருக்கும் என்று கூறிய அவர், பொதுமக்கள் தமது மாவட்டத்திற்கு வெளியே சுற்றுலா செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.