சொத்துக்களை குவிக்க அரசியலுக்கு வந்தவர்கள் யார்? யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததது தொடக்கம் இன்று வரையில் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த அரசியலுக்கு வந்துள்ளேன் என யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ஐபிசித் தமிழின் “சக்கர வியூகம்” நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மௌனிக்கப்பட்ட போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல்கலைக் கழகத்தின் படிப்பைக் கூட பூர்த்தி செய்யப்படாத ஒரு சூழ்நிலையில் தான் தன்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவிந்துள்ள சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு, பரம்பரை அரசியலைப் பாதுகாப்பதற்கு வந்தவர்களும் உண்டு, சொத்துக்களை குவித்துவிட்டு வந்தவர்களும் உண்டு, குவிக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பதற்கு வந்தவர்களும் உண்டு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.