இஸ்ரேலை விடாது துரத்தும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கை விடுத்த இப்ராஹிம் ரைசி
ஈரானின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவு மோசமாக இருக்கும் என ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) மீண்டும் எச்சரித்துள்ளார்.
கத்தார் நாட்டு மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானியுடன்(Tamim bin Hamad Al Thani) தொலைபேசி ஊடக மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலிமிக்க பின்விளைவு
அதன்போது, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சிறிய நடவடிக்கை கூட பெரிய மற்றும் வலிமிக்க பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த உரையாடலை ஈரானின் அதிபர் அலுவலகம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஈரான் அதிபரின் அறிக்கை
இதற்கு முன்னதாக சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதிகள் உள்பட 12 பேர் பலியாகியதையடுத்து பதிலடியாக இஸ்ரேலின் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
அதன்படி, ஈரானின் இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாடு அறிவித்துள்ள நிலையில் ஈரான் அதிபரின் இந்த அறிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |