தமிழரசுக்கட்சியை இல்லாதொழிக்க சதி : சாடும் சி.வி.கே.சிவஞானம்
பாரம்பரியமாக தமிழர்களுடைய விடுதலை வரலாற்றை சுமந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியை அழித்துவிடவேண்டும் என்ற எண்ணப்பாட்டில் பல கூட்டணிகள் செயற்படுகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியம் சார்ந்து எங்களுடைய கட்சி பலமான நிலைப்பாட்டில் இருக்கின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, தமிழ் மக்கள் தொடர்பாக ஜேவிபினுடைய நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.
தமிழ்கட்சிகள் எந்த தேர்தலில் ஆவது தெற்கிலே சென்று போட்டியிடுகின்றோமா? நீங்கள் வடக்கில் வந்து தேர்தலில் போட்டியிடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது?
உள்ளூராட்சி தேர்தல் என்பது எங்களுடையது. அதை மறுதலித்து எதிரத்து போட்டியிடுவது ஒரு ஏகாதிபத்திய சிந்தனை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
