வத்தளையில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்!
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Kanooshiya
வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
அதன்படி, குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும், 6 தோட்டாக்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி