காவல் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் மீது கத்திகுத்து
பொகவந்தலாவ காவல் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு காவல் அதிகாரி, அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு அதிகாரியால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை (07) பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட கான்ஸ்டபிள்
நேற்று இரவு (06) அதிக மதுபோதையில் இருந்த இரண்டு காவல் அதிகாரிகளும் காவல் நிலையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், காவல் நிலையத்தில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மற்றொரு காவல் அதிகாரி கூர்மையான ஆயுதத்தால் அவரது வயிற்றில் குத்தினார்.
இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 6 மணி நேரம் முன்