பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் அதிரடி கைது
நுவரெலியா - நானுஓயாவில் தரம் 8 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (06) இரவு குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இந்தநிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா காவல்துறையினரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று சனிக்கிழமை (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் தொடர்ந்து தலை வலி, தலைச்சுற்று, குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 4 மணி நேரம் முன்