இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism Tourism Economy of Sri Lanka
By Sathangani Feb 07, 2026 09:26 AM GMT
Report

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அநுர அரசு - போட்டுத் தாக்கிய சாமர எம்.பி

இந்திய சுற்றுலாப் பயணிகள்

இந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்த நிலையில் அவர்களின் எண்ணிக்கை 57,348 எனப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் | 300000 Foreign Tourists To Visit Sri Lanka In 2026

அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 34,724 பேரும், ரஷ்யாவில் இருந்து 30,951 பேரும், ஜேர்மனியில் இருந்து 20,272 பேரும் சீனாவில் இருந்து 16,315 பேரும் இதில் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

2026 இல் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2026 இல் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019