பதவி விலகும் அரசியலமைப்பு சபையின் செயலாளர்
அரசியலமைப்பு சபையின் (Constitutional Council) செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayake) அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவரது பதவி விலகலை அந்த சபை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
500,000 ரூபா கொடுப்பனவு
நாடாளுமன்றச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க, 2023ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
எனினும், பின்னர் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவிக்காக அவருக்கு சுமார் 500,000 ரூபா கொடுப்பனவும், ஒரு உத்தியோகபூர்வ வாகனமும் பிற வசதிகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
