மீண்டும் ஆரம்பமாகும் 50,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள்! அரசாங்கம் அறிவிப்பு
2019 முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட 50,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று(24) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்காகத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக, இரண்டு முன்னாள் அமைச்சுகளின் செயலாளர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
10,000 புதிய வீடுகள்
அதன்படி, இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் மறுபடி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு 10,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |