பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்க்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வேலைதிட்டமானது, இன்று (30) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
வேலைதிட்டத்திற்கு அமைய அந்த காலப்பகுதியில் நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் விசேட சோதனைகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம்
அத்தோடு, நுகர்வோர் முறைப்பாடுகள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் சோதனைகள் மற்றும் விசாரணைகளை நடத்தவும், நுகர்வோர் அதிகமாக வாங்கும் ஆடைகள், நீடித்த பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்