ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கும் அநுர அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Journalists In Sri Lanka
By Raghav Jun 01, 2025 02:27 PM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் அநுர அரசாங்கமும் பாராமுகமாக உள்ளதாக யாழ். வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (31.05.2025) மாலை இடம்பெற்ற, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் மயூதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், வடமராட்சியை (Vadamarachchi) சேர்ந்த நடேசன் மட்டக்களப்பில் (Batticaloa) வாழ்ந்து வந்த நிலையில் தென் தமிழீழ மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டு ஊடக செயற்பாட்டின் மூலம் துணைநின்றவர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று: எடுக்கப்பட்ட நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று: எடுக்கப்பட்ட நடவடிக்கை

உயிர் அச்சுறுத்தல்

அதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் ஓய்ந்து ஒதுஙகாது இறுதி மூச்சு உள்ளவரை ஊடகப்பணி ஆற்றியவர் நடேசன்.

ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கும் அநுர அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Continuing Media Intimidation

இறுதியாக இதே நாளில் 2004ஆம் ஆண்டு சிறீலங்கா அரச படைகளோடு சேர்ந்தியஙகிய துணை ஆயுத குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட சிங்கள ஊடகவியலாளர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

கதி கலங்கிய ரஷ்யா: டசின் கணக்கான போர் விமானங்களை அழித்தொழித்த உக்ரைன்

கதி கலங்கிய ரஷ்யா: டசின் கணக்கான போர் விமானங்களை அழித்தொழித்த உக்ரைன்

ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது.

ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கும் அநுர அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Continuing Media Intimidation

அன்று ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் இன்று வன்முறை வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயராலும் தாக்குதல்கள், விசாராணகள் என்ற வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன.

அநுரகுமார திசநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று ஆறு மாதங்களை கடந்துள்ள போதிலும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாராமுகமாக செயற்பட்டு வருகின்றது.

ஆட்சி மாறினாலும் இதே நிலை தொடர்கின்றமையே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி : கஜிந்தன் 

யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

முல்லைத்தீவில் சோகம் - ஆலய கேணியில் தவறி விழுந்த இரு மாணவிகள் பலி

முல்லைத்தீவில் சோகம் - ஆலய கேணியில் தவறி விழுந்த இரு மாணவிகள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025