தையிட்டியில் மீண்டும் தொடர் போராட்டம் - களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை - திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் இன்றையதினம் (02) மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
நாளையதினம் (03) போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டம் நாளையதினமும் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த தொடர் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்து நிற்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்