சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தில் கடுமையான முரண் நிலை : 9 அனைத்துலக அமைப்புக்கள் கூட்டுக் குற்றச்சாட்டு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கத்தில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாக ஒன்பது அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக குற்றஞ்சாட்டியுள்ளன.
இலங்கை தொடர்பாக இந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கத் திட்டமிடும் உண்மை ஆணைக்குழு குறைபாடுள்ள ஒரு திட்டம் என கண்டனம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு
சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கத் திட்டமிடும் ஆணையகம் சுயாதீனமாகவும் திறமையாகவும் செயற்படுவதற்குரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லையெனவும், மாறாக குற்றங்கள் தொடர்பான வழக்குகளைத் தடுக்கும் முயற்சிகளே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வு அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமை கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகளும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.