வெதுப்பக உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாணின் விலையை குறைக்க, வெதுப்பக சங்கம் முடிவெடுக்காவிட்டால், அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாண் மற்றும் வெதுப்பக பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை, வெதுப்பக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலை
வெதுப்பக உரிமையாளர்களும், இது தொடர்பில் முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் தேவை என்ற கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான இரண்டு இறக்குமதியாளர்களைத் தவிர அரசாங்கமும் கோதுமை மாவை இறக்குமதி செய்கிறது.
அத்துடன் வெதுப்பக உரிமையாளர்களுக்கு தேவையான அளவு கோதுமை மாவை வாங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்தநிலையில், பாணின் விலை குறைக்கப்படும் தொகையை தாம் வெதுப்பக உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |