கிழக்கில் அரசியல்வாதிகளின் தலையீட்டில் அள்ளப்படும் மணல் - ஒத்துக்கொண்டார் மகிந்த
batticaloa
mahinda amaraweera
eastern province
sand
By Sumithiran
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டில் மணல் அகழப்பட்டு களப்புகள் நிரப்பப்படுவதாக சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே குளங்களில் மண்ணை அகழ்ந்து களப்பு நிரப்பப்படும் நடவடிக்கை தொடர்பில் அவர் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தில் மணலை அள்ளிச்சென்று மாலைதீவில் தீவு ஒன்று உருவாக்கப்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.