எங்கிருந்து வந்தார் சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்!
திருகோணமலை சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையத்தை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் எடுத்த நடவடிக்கையை தடுப்பதற்காக வைக்கப்பட்ட புத்தர் சிலையே பூதாகரமாக்கப்பட்டுள்ளது.
விகாரையால் வெளிநபருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக நிலையத்தை அகற்றப் போவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் விகாராதிபதிக்கு அறிவித்துள்ளது. அதை தடுப்பதற்காக விகாராதிபதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்தில் இதை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு ஒன்று பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு செயற்படவில்லை.
ஏனென்றால் விகாரைக்கு வழங்கப்பட்டிருக்கும் காணியில் வியாபார நடவடிக்கைக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானதாகும்.
ஆனால் தற்போதுள்ள விகாராதிபதி கரையை அண்மித்த பகுதியில் வர்த்தக நிலையத்தை நடத்தி செல்வதற்கு வெளியாருக்கு வழங்கியுள்ள காணி கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தாகும்.
கடந்த காலங்களில் நாடு முழுவதும் கரையோர திணைக்களத்தால் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாகவே இதுவும் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அச்ந்தர்ப்பத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் மதப்பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அத்திபாரம் போடப்பட்டுள்ளது.
ஆனால் மதப்பாடலையில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார் என்று குறிப்பிடப்படவில்லை. உண்மை என்னவென்றால் அங்கு மதப்பாடசாலை இயங்கவில்லை.
விகாராதிபதி இடைக்கால தடை உத்தரவு பெறப்பாடத நிலையில் ஏழு நாட்களுக்கு உடைக்க முற்பட்ட நிலையில் நேற்று இரவு பலாங்கொடையில் இருந்து ஒரு பிக்கு சென்றுள்ளார், இவர் இனவாதம் பேசுபவர்.
இவர் இந்த சம்பவத்தை தனது கையில் எடுத்து விகாரையில் இருந்த புத்தர் சிலையை கொண்டு வந்து அத்திபாரம் போடப்பட்ட மதப்பாடசாலையில் தூண்கள் அமைக்கப்பட்டு வைக்க முற்பட்ட போதே காவல்துறையினர் முன்னலையாகியுள்ளனர்.
இச்சம்பத்தை பூதாகரமாக்க திருகோணமலை ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர் ஒருவரும் செயற்பட்டுள்ளார்.
அத்தோடு மொட்டுக் கட்சியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை கரையோரம் பேணல் திணைக்களத்தின் சட்டத்திற்குட்பட்ட பிரச்சினையாகும்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்