நாகரிகமற்ற முறையில் நடந்த கெஹெலியவின் மகன் - காணொளியால் வெடித்த சர்ச்சை
கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகனான ரமித் ரம்புக்கொவெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரமித் செய்தியாளர்களை நோக்கி நடுவிரலைக் காட்டிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இவருக்கு எதிராகச் சட்டவிரோதச் சொத்துச் சேர்ப்பு தொடர்பான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ரமித் ரம்புக்வெல்ல ரூ. 296 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களுக்குக் கணக்கு காட்டத் தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர் தனது தந்தையின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய , 2022 ஜனவரி 1 முதல் 2023 நவம்பர் 14 வரையிலான காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவருக்கு எதிராகச் சட்டப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை நோக்கி நடுவிரலைக் காட்டிய காணொளி சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |