ஒரு வார்த்தை பிழைக்காக பதவி விலககோருவதா..! அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி
தரம் 06 பாடத்திட்டத்தின் ஆங்கில பாடத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளம் இடப்பட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் கல்வி அமைச்சராகவும் உள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய அதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும் ஒரு பாடத்தொகுதியில் ஒரு வார்த்தை குறைபாட்டிற்காக, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்ப்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று(06) நடந்த வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதவி விலகுவதற்கான சரியான காரணம்
கல்வி சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டிற்கும் மாணவர்களுக்கும் எதிரானதாக இருந்தாலோ, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.

பாடத் தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையின் அடிப்படையில், பதவி விலகுமாறு கோருவது நியாயமற்றது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 7 மணி நேரம் முன்