லண்டனில் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி லண்டனில் (London) ஈழத் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக நேற்று (07.01.2026) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அடக்குமுறைகள் கைதுகளுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் புலம்பெயர் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது
தையிட்டியில் இடம்பெற்ற ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 22 மணி நேரம் முன்