பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு!
ஒன்று இரண்டு அல்ல பத்துக்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வந்தாலும் அவற்றை தோற்கடிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரத் தயாராகும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாரிய பேரழிவு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் பாரிய பேரழிவு ஒன்று ஏற்பட்டது. அந்த பேரழிவையடுத்து ஒரு மாத காலப்பகுதிக்குள் நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கத்தால் முடிந்தது.

எதிர்க்கட்சிகளுக்கு தற்போது செய்வதறியாது உள்ளனர். அதனால் தான் இவ்வாறு அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ” என தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் காரணமாக, கல்வி அமைச்சர் பதவியை வகிக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி நேற்று (07.01.2026) நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 22 மணி நேரம் முன்