இந்தியாவில் பெண் வைத்தியர் உயிர்மாய்ப்பு! கையில் எழுதி இருந்த குறிப்பால் வெடித்த சர்ச்சை
இந்தியாவின் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது மரணத்திற்கான காரணத்தை விவரிக்கும் ஒரு குறிப்பை அந்த பெண் வைத்தியர் தனது கையில் எழுதியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், இரண்டு காவல்துறை அதிகாரிகளின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கடந்த ஐந்து மாதங்களாக ஒரு காவல்துறை அதிகாரி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், மற்றொரு அதிகாரி தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண் வைத்தியர் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்திருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குற்றவாளிகள் தப்பியோட்டம்
இந்த நிலையில், குறித்த வைத்தியரின் உயிரிழப்பை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்படி, தற்போது இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதகாவும் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சக்கன்கர், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |