இலங்கையருக்கு கிட்டிய வாய்ப்பு: இன்று இரவு வானில் அரிய நிகழ்வு
இன்று இரவு வானில் அரிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதை இலங்கையர்கள் காணக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ‘C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வால் நட்சத்திரம் ‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும்.
1,350 ஆண்டுகளுக்குப் பின்
Lemmon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தென்படும்.
மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேல் கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemmon என்று பெயரிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |