கோட்டாபயவை மண்டியிட்டுப் பணிந்த உயர் அதிகாரி- வெடித்தது பெரும் சர்ச்சை!
சிறிலங்கா அதிவேக நெடுஞ்சாலையில் பயண அனுமதிக்கான சீட்டு கொடுக்கும் நபர், அரச தலைவர் கோட்டாபயவை கைகூப்பி கும்பிடும் புகைப்படம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இவ்வாறு குடும்பிடுபவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் ஒரு பொறியிலாளர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு படித்தவர்கள் கும்பிடுவது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் மூத்த அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா சமூக வலைத்தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை திறப்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் காரில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
அதன் போது பயண அனுமதிக்கான சீட்டு கொடுக்கும் நபர், கை கூப்பி கும்பிட்ட செயற்பாடானது ஒட்டுமொத்தக் கல்விமுறையின் இறுதியான திவால் நிலையாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.