தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை கூட்டுவது குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

M. A. Sumanthiran K.V.Thavarasha ITAK General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Oct 05, 2024 12:53 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மத்திய குழுவை உடனடியாகக் கூட்டுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கட்சியின் செயலாளருக்கு நேற்று (04) அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு இன்னும் சட்டபூர்மாக கட்சியின் யாப்புக்கு முரணில்லாத வகையில் நியமிக்கப்படாத போதும் பலர் தங்களை இப்போதே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களாகப் பிரசாரங்களை முன்னெடுப்பதை சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கின்றது.

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

சுமந்திரனின் கூற்று 

எனவே பின்வரும் காரணங்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய குழுவைக் கூட்டி உரிய முறைப்படி தீர்மானங்களை எடுப்பதே முறையானது. தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர்கள் தேர்வுக்குழுவில் உள்வாங்கப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு முரணானது. தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருந்து ஒருவர் தன்னைத் தானே தேர்வு செய்வது எப்படி நியாயமாகும்.

கடந்த 28.09.2024 அன்று காலையில் இருந்து மாலை இடம்பெற்ற மத்தியகுழுக் கூட்டத்தின் இறுதித் தருவாயில் தேர்வுக் குழு என்ற அடிப்படையில் ஒரு பெயர்ப் பட்டியல் வாசிக்கப்பட்டது. சிலர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர் ஆயினும் அவை பதிவு செய்யப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை கூட்டுவது குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Convening Of The Central Committee Of The Itak

ஆனாலும் சுமந்திரனின் “இப்போது நேரம் சென்று விட்டது, இப்போதைக்கு இது இருக்கட்டும், தேர்வுக் குழு விவகாரத்தைப் பின்னர் பார்ப்போம்” என்ற கூற்றுக்கு அமைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாமலேயே தேர்வுக்குழு விவகாரம் பிற்போடப்பட்டது.

கட்சியின் யாப்புக்கு அமைய ஒரு தீர்மானம் எடுப்பதாயின் அவ்விடயதானம் ஒருவரால் முன்மொழியப்பட்டு மற்றுமொரு அங்கத்தவரால் வழிமொழியப்படல் வேண்டும். ஆனால் தேர்வுக்குழு விவகாரம் முன்மொழியப்படவுமில்லை வழிமொழியப்படவுமில்லை.

எனவே இதற்கு மேலும் தேர்வுக்கு குழு இதுதான் என்று தனிப்பட்டரீதியில் பிரகடனப்படுத்துவது கட்சியின் யாப்புக்கு முரணானதாகும். சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியே தேர்வுக்குழு நியமிக்கப்படல் வேண்டும்.

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம் : கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம் : கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு

நாடாளுமன்றத் தேர்தல்

ஆனால் வாசிக்கப்பட்ட பதினொரு பெயர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த 04 பேர் இருந்தார்கள். ஆயினும் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெயரேனும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

தேசியப் பட்டியல் குறித்து இங்கு இறுதித் தீர்மானம் எட்டப்படல் வேண்டும். ஏனெனில் முன்னர் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் பெற்றவர்களோ தேர்தலில் தோல்வியுற்றவர்களோ தேசியப்பட்டியல் ஊடாக மீள நியமனம் பெறக் கூடாது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை கூட்டுவது குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Convening Of The Central Committee Of The Itak

அத்துடன் புதிதாக திடீரென்று யாரையும் கொண்டு வந்து தேசியப்பட்டியலுக்குள் தன்னிச்சையாக உள் நுழைப்பதும் பொருத்தமானதல்ல “கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றவர்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது” என்பது சரியான விடயமல்ல.

ஏனெனில் எம்.சிவசிதம்பரம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து பின்னர் அடுத்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் தலைமைத்துவ இடைவெளியை அலங்கரித்தார்.

இது யாராலும் மறுக்க முடியாத வரலாறு. தோல்வியடைதல் என்பது இங்கு கருத்தில் கொள்ளப்படுவது பொருத்தமானதல்ல. ஆகவே பொறுப்புவாய்ந்த தமிழர்களின் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உடனடியாக தனது மத்திய குழுவைக் கூட்டி உரிய முறைப்படி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று தயவாய் பொறுப்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.“ என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனின் கோரிக்கை! மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள சாள்ஸ் நிர்மலநாதன்

சுமந்திரனின் கோரிக்கை! மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள சாள்ஸ் நிர்மலநாதன்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026