சமையல் எரிவாயு தட்டுப்பாடு! ஒரு வாரத்திற்குள் தீர்வு
லாப் ரக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் சந்தையில் லிட்ரோ எரிவாயு சிலின்டருக்கு பெரும் கேள்வி எழுந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோகம் மற்றும் வர்த்தக பணிப்பாளர் ஜனக பதிரன (Janaka Pathirana) தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த நாட்களில் சந்தைக்கு சுமார் 6 இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்பட்டன.
ஆனாலும் லிட்ரோ நிறுவனம் வழமையான நாட்களை காட்டிலும் தற்போது சந்தைக்கு 25 சதவீத அளவில் சமையல் எரிவாயு சிலின்டரை விநியோகித்துள்ளது.
இந்நிலையில் இவ்வாரம் சுமார் 8 இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு சிலின்டர் தட்டுப்பாட்டிற்கு இன்னும் 6 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.