ஐந்தாவது நாளாகவும் ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்
இலங்கையில் இன்றையதினம்1,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 412 பேருக்கு தொற்று ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 1,000 ஐ தாண்டிய தொற்று எண்ணிக்கையாகும். அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் 109, 863 ஆக உள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, கரந்தன பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ருவான்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், தேவாலகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், யக்வில பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவரும், வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.